பாரம்பரிய விவசாயம் தொடர்பில் மாற்றம் இல்லை என வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
tamil news: வடமாகணத்தில் பாரம்பரிய விவசாயம் தொடர்பில் “விவசாயிகளின்மனநிலையில் மாற்றம் தேவை” என வடமாகாணத்தின் விவசாய அமைச்சின் செயலாளர் எம்.ஜேகு ஞாயிற்றுகிழமை (2024.07.14) தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு "புதிய தொழிநுட்ப முறைகளை நடைமுறைக்கு கொண்டு வராத விவசாயிகள்" எனக் கூறிய அவர் ஒரு ஏக்கர் நெற் செய்கைக்கு தேவையான வளம் ஆனது எட்டு தொடக்கம் 10 ஏக்கர் சிறுதானியம் செய்வதற்கு போதுமானது என்றும் ஒரே நேரத்தில் ஒரே வகையான பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதால் சந்தைப்படுத்தல் மிகவும் சிக்கலானது.
ஆதலால் பயிற்செய்கையை மாற்றி செய்வதனால் லாபம் ஈட்ட முடியும் வடமாகணத்திலே நெல் தன்னிறைவு பெற்றுள்ளதால் காலப்போகம் மாத்திரமே போதுமானது என்றும் புதிய தொழில்நுட்பம் குறித்த வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளது விவசாய அமைச்சு என்றும் மேலும் ஆணித்தரமாக கூறியிருந்தார்.
கனகராசா திலக்,ஷனா, 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.
பால்நிலை ,பெண்கள் சமத்துவம் மற்றும் காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Bachelor of Arts honors in Tamil ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்