காவற்துறை போல நடித்து பெண்களை துஸ்பிரயோகம் செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!
tamil news: காவற்துறை அதிகாரி போல நடித்து பெண்களை அச்சுறுத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, விடுதிகளுக்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த முன்னாள் இராணுவ சிப்பாயும், அவரது உதவியாளரையும் காவற்துறை கைதுசெய்துள்ளது.
அதாவது,
உயிரிழந்த காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி குறித்த சிப்பாய் போலி காவற்துறை அடையாள அட்டையையும் தயாரித்துள்ளார்.
தொடர்ந்து பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரபல ஆடை விற்பனைநிலைய பெண் ஊழியர் ஒருவர் கடந்த 14ம் திகதி தனது காதலனை சந்தித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் அந்த முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.
அதன்படி முச்சக்கரவண்டியில் ஏறி சிறிது தூரம் சென்றபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் காவற்துறை அடையாள அட்டையை காட்டியுள்ளார்.
இதன்போது, காவற்துறை அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சிப்பாய், குறித்த பெண்ணிடம் நீ விபச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து அனைத்துத் தகவலையும் கண்டுபிடித்துவிட்டதாக கூறி மிரட்டியுள்ளார்.
பின்னர் அவளை பல்பொருள் அங்காடிக்கு அருகில் அழைத்துச்சென்று, அவள் அணிந்திருந்த 2 பென்டன்ட்கள், வளையல்களை வலுக்கட்டாயமாக கழற்றிவிட்டு அவளது யுவுஆ கார்ட்டிலிருந்து 150,000 ரூபாவை எடுத்துக்கொண்டு பிலியந்தலை மொரட்டுவ வீதியிலுள்ள விடுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை சிப்பாய் விடுதிக்கு அழைத்துச்செல்வது சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் பிலியந்தலை நகருக்கு அழைத்துவந்து வேறு முச்சக்கரவண்டியில் அனுப்பி வைத்துள்ளார்.
சம்பவத்தை எதிர்கொண்ட ஆடைத்தொழிலாளியான பெண் கடந்த 15ம் திகதி கெஸ்பேவ காவற்துறையில் சந்தேகநபர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக முறைப்பாடு செய்திருந்த நிலையில்,
அவர் வழங்கிய முச்சக்கரவண்டியின் பதிவிலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காவற்துறை, முச்சக்கரவண்டியின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைகளுக்கு அமைய படுவந்தர, லுல்வல பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த முன்னாள் இராணுவ சிப்பாயை(வயது 57) காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சிப்பாயிடமிருந்து போலி காவற்துறை அடையாள அட்டை, ஐஸ் போதைப்பொருள், நடிகை உட்பட 5 பெண்களின் தேசிய அடையாள அட்டை, ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, 18 சிம் அட்டைகள், 5 ஸ்மார்ட் தொலைபேசிகள் ஆகியன காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகநபருக்கு உதவியாராக முச்சக்கரவண்டி சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரின் கையடக்கத்தொலைபேசியை பரிசோதித்தபோது ஆடைத் தொழிலாளி உட்பட பல பெண்களுடனான கட்டாய உடலுறவு காணொளிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த காவற்துறை,
பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் காவற்துறை பரிசோதகர் போல நடித்து பெண்களை மிரட்டி தங்கம், பணத்தை கொள்ளையடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிpத்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன்,
அவரது மோசடிகளில் சிக்கியவர்கள் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.