புதிய பிறப்புச்சான்றிதழ் குறித்து போலியான செய்தி! மக்களே உசார்
tamil news: 2021ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னரான ஆண்டுகளில் பிறந்த அனைத்து குழந்தைகளது பிறப்புச் சான்றிதழ்களும் புதியவகை பிறப்புச் சான்றிதழுக்கு மாற்றப்படவேண்டுமென அரசாங்கத்தால் கட்டாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் தகவல் முற்றிலும் போலியானது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதாவது கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் புதிய பிறப்புச்சான்றிதழினை இலங்கை ஆட்பதிவு திணைக்களம் பிரசுரித்துவருவதாகவும், அதில் நபரின் தகவல் ஆங்கிலம், சிங்கள மொழிகளில் மாத்திரம் காணப்படுவதாகவும் பிறிதொரு நபரின் பிறப்புச்சான்றிதழை அடையாளப்படுத்தி செய்திகள் வெளிவந்தன.
இதனையடுத்து நரன் மீடியா இதனை உறுதிசெய்யும் பொருட்டு ஆராய்ந்தவிடத்து அது போலியான செய்தி என்பது நிரூபணமானது.
அந்தவகையில் புதிய பிறப்புச்சான்றிதழ் வழங்கலானது கம்பஹா, தெஹிவளை, ஹகுரண்கெத்த, குருணாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேசசெயலகங்களில் மாத்திரம் பரீட்சார்த்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதொன்றாகும்.
ஆனால் அதனை பிழையான பொருள்கோடலில் போலியான செய்திகளா மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே மாவட்டங்களின் நிர்வாக மொழிகளிலேயே பிறப்புச்சான்றிதழ் ஆவணங்கள் பேணப்படும் என்பதுடன்,
இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனபதையும் கேட்டுக்கொள்கின்றோம்.