மட்டு. கடற்கரையில் பெண்ணின் சடலம்! பொதுமக்களிடம் உதவி கோரல்
tamil news: மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இன்றையதினம்(08.07.2024) 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த காவற்துறையினர் குறித்த இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இதுவரையில் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை அடையாளம் காண்பதற்கு காவற்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய பிரதேசங்களில் இதுவரையில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை காணவில்லை எனில் தமக்கு அறியத்தருமாறு காவற்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்