இரட்டை மரணங்கள்: சிசிடிவி காட்சிகளை காவற்துறை ஆய்வு!
tamil news: நேற்றையதினம்(02.07.2024) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதாவது,
நேற்று(02.07.2024) மாலை அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியிலிருந்து விழுந்து 15 வயதுடைய சிறுவனும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 2 வாலிபர்களும் மரணம் குறித்து காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் தரம் 10 வகுப்பு மாணவர்கள் எனவும் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த 2 மாணவர்களும் பாடசாலை முடிந்ததும் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் ஆடைகளை மாற்றிக்கொண்டு உடமைகளை விட்டுவிட்டு, ஜிம்மிற்கு வெளியே படிக்கட்டு வழியாக கட்டிடத்தின் 67வது மாடியை அடைந்ததாக காவற்துறை மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.