வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஆறிய மனம் II - புனை கதையாசிரியர் சம்பந்தன்


ஒரு கிழமை கழிந்தது. சிற்றம்பலத்தையும் மணியையும் தாமோதரம் தாம் நினைத்த அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒன்றரைச்செலவுடன் எத்தனையோ பிளீஸுகள் பண்ணிச் சேர்த்துவிட்டார். முன் பணமாகவும் ஒரு சிறு தொகை கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை சிற்றம்பலமும் மணியும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார்கள். அம்மாவிடம் போய் ஏதோ முறையிட்டார்கள். (அந்தப் பள்ளிக்கு இனிப் போகமாட்டோம் என்றுதான்!) தாய் கெஞ்சியும் பார்த்தாள்; மணி ஒரே பிடிவாதமாய் நின்றபடியால் மீனாக்ஷியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள் - பிள்ளைப் பாசத்தால்! சகல விஷயங்களையும் தெளிவாக அவளுக்குச் சிற்றம்பலம் சொல்லி வைத்தான்.

 

தமது இரத்தினங்களின் படிப்பையும் பள்ளியையும் பற்றி அறிய ஆவலோடிருந்த தாமோதரம் அவர்கள் படித்துக் கொண்டிருந்த அறைக்கே வந்துவிட்டார். அங்கேதான் மீனாக்ஷியும் அவர்கள் படிப்பதை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டு இருந்தாள். தாமோதரம் "மணி! எப்படியடா பள்ளி? உபாத்தியாயர் பிடித்துக்கொண்டதா?" என்று தம் வேட்கையைப் புலப்படுத்தினார்.

 

"ஹும் -ஐயா, நான் அந்தப் பள்ளிக்கு இனிப் போகமாட்டேன்; அண்ணாவும் வரார் ஈநும்!" என்றான் தாயின் புன்சிரிப்பிற் கடைக் கண்ணை எறிந்து கொண்டே!

"ஏன்? அங்கே என்ன? அடித்தார்களா?"

சை இல்லை."

"பின் எதற்காக மாட்டாய்?"

அம்மாவைக் கேளுங்கோ.''

"ஏன் பெரியதம்பி, பள்ளிக்கூடம் பிடிக்கவில்லையோ? மணி குழப்படி பண்ணுகிறானோ?'

 

"அப்படி ஒன்றும் இல்லைஐயா; பள்ளிக்கூடம் நன்றாய்த்தான் இருக்கு. உபாத்தியார்களும் அப்படித்தான்! ஆனால் எல்லாம் ஒரு புது மாதிரியாக இருக்கு. காலையில் பிறேயர் ஹோலில் என்னமோ எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்! அதில் ஒன்றும் விளங்காத ஒரு பாடம்! அவர்கள் சொல்லித் தருகிறதை அப்படியே சப்பித் தின்னவேண்டும்! அங்கே எல்லாரையும் பார்க்க வேறுவிதமாய்த்தான் தோன்றுகிறார்கள்! அப்பா, நாங்கள் ஏன் அந்த அந்நிய மதப் பள்ளியில் படிக்க வேண்டும்? எங்கள் சமயத்தில் எங்கள் சமய உபாத்தியார் படிப்பிக்கிற பள்ளிக் கூடங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லையே? இருக்கின்றனதானே? என்னுடைய மனசுக்கு சரியென்று ஒன்று செய்தல்கூட மிகப் பெரிய குற்றமாக இருக்கிறதே! எங்கள் மனிதர் படிப்பிக்கும் பள்ளியில்தான் படிக்க வேண்டும். இல்லையேல் படிப்பே வேண்டாம்" என்று சிறிது அழுத்தந்திருத்தமாகச் சொன்னான்.

 

தாமோதரம் சிறிது நேரம் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். தம்பிஅங்கேதான் படிப்பு நல்லாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்களே! பழக்க வழக்கமும் தான்; நீ கொஞ்சம் விருப்பம் வைத்துத்தான் சிறிது காலம் அங்கே படித்துப் பாரேன்'' என்றார்.

 

"ஐயா, நான் அந்தப் பள்ளிக்குப் போதல்என்னவோ ஒருபொழுதும் முடியாது; சும்மா இருப்பேன்; சுதந்திரமும் போகாது" என்று அவன் முணுமுணுத்தான்.

 

"தம்பி, இந்தக் கிழமையும் போய் வா; நான் பெரிய வாத்தியாரோடு எல்லாம் பேசி ஒழுங்கு பண்ணுகிறேன்; மனசைக் கஷ்டப்படுத்தாதே?"

 

"ஐயா, அம்மாவிடம் அல்லாமல் ஒரு சட்டைக்காரியிடம் என்னைச் சோறு வாங்கிச் சாப்பிடச் சொல்வது போல இருக்கிறது; நீங்கள் அங்கே போகச் சொல்லுவது; ஏன் இந்த ஊரில் வேறு பள்ளிக்கூடம் இல்லையா நாங்கள் படிக்க" என்று சிறிது கம்பீரத்துடன் சொன்னான் சிற்றம்பலம்.

 

"சைவப் பள்ளிக்கூடம் எத்தனையோ இருக்கிறதுதான் தம்பி; கல்வி நன்றாயில்லையே - என்ன செய்வது? சும்மா காசைக் கொட்டுகிறதா?"

"அப்படியானால் அதற்கேற்ற வழிகளை செய்யவேண்டியது சைவர் கள் எல்லாருக்குங் கடமைதானே! உங்களுக்கும் அது உரியதுதானே?''

"நான் என்ன செய்ய முடியும்? நான் ஒருவன் சொன்னால் கேட்பார்களா?"

"ஐயா, இப்படியே ஒவ்வொருவரும் 'நாம் என்ன செய்வது; நம் பாட்டைப் பார்ப்போம்' என்று இருந்தால் காரியம் எப்படி உருப்படும்"

 

சரி, சரி. எத்தனை பென்ஷனர்மார்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி, தம் மந்த புத்தியால் தமது பிள்ளைகளை அநியாயமாகத் திருப்ப இடங் கொடுத்தார்களோ? தனிப்பட்ட முறையில் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும்> சேர்ந்தாவது சைவர்களைக் கண்விழிப்பிக்கச் செய்ய வேண்டியது எங்கள் கடமைதான்! அன்று மணியம் சொன்ன போதும் நான் உணரவில்லையே!"

மீனாக்ஷி உள்ளூர வந்த மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ளாமலே சமையலுள்ளுட் சென்றாள்.