வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

புதுக்குடியிருப்பில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாக 18 வயது இளைஞன் கைது!


tamil news: நேற்று முன்தினம்(04.08.2024) முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, தேராவில் பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியினை தகாத உறவுக்குட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு காவநற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.


குறித்த 15 வயது சிறுமி பாட்டியுடன் வாழ்ந்துவந்த நிலையில் அந்த இளைஞனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இளைஞன் அழைத்துச்சென்று சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில் சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞனை நேற்று(05.08.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 13ம் திகதிவரை இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.