கலைஞர்கள் உட்பட 24 இலங்கையர்கள் குவைத்தில் கைது!!!
tamil news: ஜே.வி.பி.யுடன் இணைந்த 'எதெர அபி' அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உட்பட சுமார் 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
'எக்ஸ்' வலைத்தளத்தில் இடப்பட்ட பதிவொன்றில்,
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் விடுவிக்க குவைத் அதிகாரிகளுடன் அவர்கள் பணியாற்றிவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து அமைச்சர் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை.
Labels:
வெளிநாட்டு செய்திகள்