வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

புத்தளத்தில் 2,689Kg பீடி இலைகள் மீட்பு!


tamil news: புத்தளம், கற்பிட்டி வடக்கு எல்லைப்பகுதியின் குதிரமலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்திய படகு ஒன்றிலிருந்து கணிசமான அளவு பீடி இலைகள் நேற்றுமுன்தினம்(12.08.2024) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


அதாவது,

இலங்கை கடலோர காவற்படையின் விஷேட ரோந்து கப்பலில் கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விசேடசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்திய இயந்திர படகு ஒன்றினை சோதனைக்குட்படுத்தியபோது அதில் சுமார் 80 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 2,689Kg பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.


அத்துடன், குறித்த இயந்திர படகிலிருந்த 3 இந்தியர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டதுடன் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இயந்திர படகும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் அனைத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


2024 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 12ம் திகதிவரை சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சுமார் 37,619Kg பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பெயரில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.


மேலும் இலங்கைக்குச் சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும்வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.