30 வருடத்திற்கு பிறகு சிறைமீண்ட கீரிமலை கிருஸ்ணர்!
tamil news: சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்றையதினம்(16.08.2024) யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 30 வருட காலமாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இந்த பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயம் உள்ளது.
இந்நிலையிலேயே குறித்த ஆலய வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றுமுதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்