பங்களாதேஷ் போராட்டம்: குறைந்தது 300 பேர் இறப்பு!!! காவற்துறை, மருத்துவர்கள் அறிக்கை
tamil news: காவற்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் அறிக்கைகளின் அடிப்படையில், பங்களாதேஷில் நடந்த மோதல்களில் மொத்த இறப்பு எண்ணிக்கை குறைந்தது 300 பேராக உயர்ந்துள்ளதுஇ
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் சுமார் 94 பேர் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மிக மோசமாக இறந்தனர்.
அதாவது,
1971 ல் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசத்தின் சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகிதம் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையை நிறுத்தக் கோரி மாணவர்கள் கடந்த மாதம் போராட்டங்கள் தொடங்கினர்.
வன்முறை வெடித்ததால் நாட்டின் உச்ச நீதிமன்றம், படைவீரர்களின் ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும் 93 சதவீத வேலைகள் தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
மீதமுள்ள 2 சதவீதம் சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.
அரசாங்கம் இந்த முடிவை ஏற்றுக்கொண்டது, ஆனால் போராட்டக்காரர்கள் அரசாங்கத்தின் பலத்தைப் பயன்படுத்தியதால் வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஹசீனாவின் நிர்வாகம் எதிர்க் கட்சிகள் மற்றும் அவர்களின் மாணவர் பிரிவுகள் வன்முறையைத் தூண்டியதாக குற்றஞ்ட்டியுள்ளது.
பங்களாதேஷ; தலைநகர் டாக்கா மற்றும் பிற பிரதேச மற்றும் மாவட்ட தலைமையகங்கள் உட்பட பல பகுதிகளில் சில விதிவிலக்குகளுடன் அரசாங்கம் முன்னதாக ஊரடங்கு உத்தரவை விதித்திருந்த நிலையில் காலவரையற்ற ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அமுலிலிருப்பதாக இராணுவம் அறிவித்தது.
கடந்த மாதம் அரசாங்க வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையை நிறுத்தக்கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டங்களைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் பதவி விலகலைக் கோருகின்றனர்.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் 300 இற்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற வன்முறையாக மாறியுள்ளது.
இந்நிலையில்
'நாசவேலை, அழிவுகளில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் இனி மாணவர்கள் அல்ல, குற்றவாளிகள் என்றும்இ மக்கள் அவர்களை இரும்புக் கரங்களால் சமாளிக்க வேண்டும்'
என ஹசீனா கூறினார்.
மேலும் திங்கள் முதல் புதன்கிழமை வரை அரசு விடுமுறை அறிவித்ததுடன், நீதிமன்றங்கள் காலவரையின்றி மூடப்படுவதுடன், மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதுடன், சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
வன்முறையைத் தடுக்கும் வகையில் இவ்வாறு சேவைகள் துண்டிக்கப்பட்டதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கான இளநிலை அமைச்சர் முகமது அலி அராபத் தெரிவித்தார்.
கடந்த வாரங்களில் குறைந்தது சுமார் 11,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த அமைதியின்மை நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கும் காரணமாக அமைந்தநிலையில் அதிகாரிகள் ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூடு ஊரடங்கு உத்தரவை விதித்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பாளர்கள் 'ஒத்துழையாமை' முயற்சிக்கு அழைப்பு விடுத்தனர்.
வங்காளதேசத்தில் வேலைநாளான ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டாம் என்றும் வரிகள் அல்லது பயன்பாட்டு பில்களை செலுத்த வேண்டாம் என்றும் மக்களை அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து டாக்காவின் ஷாபாக் பகுதியிலுள்ள பெரிய பொது மருத்துவமனையான பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கி பல வாகனங்களையும் எரித்தனர்.
போராட்டக்காரர்கள் டாக்காவிலுள்ள தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறை வாகனத்தை சேதப்படுத்தியதை காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
தோட்டாக்கள், றப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் மக்கள் மீது காவற்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை மற்ற காணொளிகளும் காட்டுகின்றன.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் வாகனங்கள் மற்றும் ஆளுங்கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்ததை அங்கிருந்து வரும் தொலைக்காட்சிக் காட்சிகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வடமேற்கு மாவட்டமான சிராஜ்கஞ்சில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 13 காவற்துறை அதிகாரிகளும் அடங்குவர் என்று டாக்காவில் உள்ள காவற்துறை தலைமையகத்தின் தகவற்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென்கிழக்கு பங்களாதேஷிலுள்ள ஃபெனி மாவட்டத்தில் ஹசீனாவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களுடன் மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஃபெனியில் அரசு நடத்தும் மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவ அதிகாரி ஆசிப் இக்பால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'மருத்துவமனையில் தங்களிடம் 5 உடல்கள் இருந்தன.
அவை அனைத்தும் தோட்டாக்களால் தாக்கப்பட்ட நிலையில் உள்ளது.
ஆனால் அவர்கள் போராட்டக்காரர்களா அல்லது ஆளுங்கட்சி செயல்பாட்டாளர்களா என்பது தெரியவில்லை.'
என குறிப்பிட்டார்.
மேலும் டாக்காவிற்கு அருகிலுள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில், 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி அபு ஹெனா தெரிவித்தார்.
சட்டோகிராம், போகுரா, மகுரா, ரங்பூர், கிஷோர்கஞ்ச் மற்றும் சிராஜ்கஞ்ச் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்முறை மோதல்கள் நடந்ததாக ஜமுனா தொலைக்காட்சி செய்தி சேனல் தெரிவித்தது.
அங்கு பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவுடன் எதிர்ப்பாளர்கள் காவற்துறை மற்றும் ஆளும் அவாமி லீக் செயற்பாட்டாளர்களுடன் மோதினர்.
தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், குழப்பத்தைத் தடுக்க அரசாங்கம் பதவி விலகவேண்டும் என மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
கடந்த சனிக்கிழமையன்று மாணவர் தலைவர்களுடன் பேச ஹசீனா முன்வந்தார்.
ஆனால் ஒரு ஒருங்கிணைப்பாளர் மறுத்து அவர் ராஜினாமா செய்ய ஒரு அம்ச கோரிக்கையை அறிவித்தார்.
மரணங்கள் குறித்து விசாரணை செய்து வன்முறைக்கு காரணமானவர்களை தண்டிப்பதாக ஹசீனா மீண்டும் உறுதியளித்தார்.
இவ்வாறாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்துவரும் ஹசீனாவுக்கு இந்தப் போராட்டம் பெரும் சவாலாக மாறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் அவரது முக்கிய எதிரணியின் புறக்கணிப்பினால் நான்காவது முறையாக அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.