வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

உக்ரேனில் 5 இலங்கையர்கள் போர்க் கைதிகளாக தடுத்துவைப்பு!!!


tamil new: தற்போது உக்ரேனில் போர்க் கைதிகளாக 5 இலங்கைப் பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


அதாவது,

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்துவரும் மோதலின் மத்தியில் இந்த நபர்கள் சிக்கியதாக கூறப்படுகின்றது.


அவர்கள் கைதானது குறித்து மேலதிக விவரங்கள் தெளிவாக வெளிவராத நிலையில் குடிமக்களை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


2014 இல் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டதன் மூலம் தொடங்கிய உக்ரைனில் நடந்துவரும் மோதல்இ முழு அளவிலான போராக, குறிப்பாக உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.


இந்த மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளநிலையில் இலங்கையர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டு பிரஜைகள் சிப்பாய்களாக சிக்கியுள்ளனர்.


5 இலங்கையர்களும் உக்ரேனில் இருந்ததாகக் கூறப்படும்போது அவர்கள் போரிடும் பிரிவுகளில் ஒன்றால் கைதுசெய்யப்பட்டனர்.



அவர்கள் பிடிபட்டதற்கான சரியான சூழ்நிலைகள் இன்னும் அறியப்படவில்லை என்பதால் மேலும் விவரங்களை சரிபார்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


குறித்த நபர்களின் பாதுகாப்பையும், விடுதலையையும் உறுதிசெய்வதற்காக இலங்கை அரசு உக்ரேனிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.


அந்தவகையில் இலங்கை அரசு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன் தனது குடிமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் கோரியுள்ளது.


அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கு இராஜதந்திர வழிகள் பயன்படுத்தப்படுகின்றன.


மேலும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அவர்களைப் பாதுகாக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தற்போதுவரை குறித்த 5 இலங்கையர்களின் நிலை நிச்சயமற்றதாகவே உள்ளது.


உக்ரேனிலுள்ள இலங்கைத் தூதரகம், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தீர்வுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


மேலும் கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


மோதல் வலயங்களில் வெளிநாட்டு பிரஜைகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.