கடற்படையின் தாக்குதல்: இலங்கை தூதுவருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!
tamil news: இன்றையதினம்(01.08.2024) கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை படகு மோதி இந்திய மீனவர் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இலங்கையிடம் தனது கடும் எதிர்ப்பினை பதிவுசெய்துள்ளது.
அதாவது இந்திய வெளிவிவகார அமைச்சு புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரை வரவழைத்து, சம்பவம் குறித்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
அந்தவகையில்,
"துரதிர்ஷ்டவசமான உயிரிழப்பு குறித்து நாங்கள் எங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினோம்.
கொழும்பிலுள்ள எமது உயர்ஸ்தானிகரும் இன்று இலங்கை அரசாங்கத்திடம் இந்த விடயத்தை எழுப்பவுள்ளார்.
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமாக கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்துகின்றது."
என இந்திய வெளியுறவு அமைச்சின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press Statement on an incident involving loss of life of an Indian fisherman:https://t.co/3qOZJ8zLSL pic.twitter.com/o5Q8XGmm5L
— Randhir Jaiswal (@MEAIndia) August 1, 2024
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை காலை இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மீனவர் காணாமல் போயுள்ளார்.
படகில் இருந்த 4 மீனவர்களில் இருவர் மீட்கப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காணாமற்போன மீனவரை தேடும் பணி நடைபெற்றுவருவதாக வெளியுறவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அவசரமாக காங்கேசன்துறைக்குச் சென்றுள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவு 1974ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி 'இந்திய-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்' கீழ் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டார்.
இந்த ஒப்பந்தம் கச்சதீவின் மீது இலங்கையின் ஆட்சியை உறுதிப்படுத்தப்பட்டாலும் ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்கள் தீவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.