விபத்தில் படுகாயமடைந்திருந்த அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு!
tamil news: யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கல்விவலய அரச ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று(01.08.2024) அதிகாலை உயிரிழந்தார்.
பருத்தித்துறை புற்றளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யோகலிங்கம் அருள்காந்தன்(வயது-33) என்னும் வடமராட்சி கல்வி வலய ஊழியரே உயிரிழந்தவர் ஆவார்.
இவரின் இழப்பு அந்தப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்