வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!


tamil news: மட்டக்களப்பு, காத்தான்குடி காவற்துறைப்பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று(13.08.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக காத்தான்குடி காவற்துறை நிலைய பதில்பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக தெரிவித்தார். 


காத்தான்குடி பிரதான வீதி மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார்சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்திவந்த இரு இளைஞர்கள் முன்பக்கமாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிளுடன் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த சஹ்ரான் முஹம்மது சமல்கான்(20 வயது) என்பவரே பலியாகியுள்ளார்.


பின்னால் அமர்ந்து பயணித்த நபர் படுகாயமடைந்தநிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

முன்னால்வந்த  மோட்டார்சைக்கிளின் ஓட்டியும் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மரணமானவரின் சடலம் காத்தான்குடி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டநிலையில் காத்தான்குடி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.