தேர்தல் குறித்த புகார்களின் அதிகரிப்பு: தேர்தலின் நேர்மை பற்றிய கவலைகளை எழுப்புகின்றது! தேர்தல் ஆணைக்குழு
tamil news: இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் நடைமுறை தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பானது தேர்தல் வாக்குகளின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து அச்சமடையவைக்கின்றதாகவும்,
இது ஒரு முக்கியமான ஜனநாயக நடைமுறையில் நாடு எதிர்கொள்ளும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றதாகவும் இலங்கையின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று(19.08.2024) தெரிவித்துள்ளது.
அதாவது,
இலங்கை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலை நெருங்கிவரும் நிலையில் தேசிய தேர்தல் ஆணையம்(NEC) தேர்தல் முறைகேடுகள், வாக்காளர்களை அச்சுறுத்துதல் மற்றும் அரசியல் பிரச்சாரத்திற்காக அரச வளங்களைப் பயன்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் இந்த முறைகேடுகளின் அதிகரிப்பில் அடங்கியுள்ளன.
இந்தப் புகார்கள் எதிர்க்கட்சிகள், சிவில் சமூகக்குழுக்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் ஊடகப்பேச்சாளர் கூறும்போது,
"இந்த ஆண்டு பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை முன் எப்போதுமில்லாதவாறு உள்ளது, இது தேர்தல் செயல்முறையின் நேர்மை பற்றிய கவலையை உருவாக்கியுள்து.
குற்றச்சாட்டுகள் முதன்மையாக ஆளுங்கட்சி வேட்பாளர்களால் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துதல்,
ஊடகங்களின் நியாயமற்ற செயற்பாடுகள் மற்றும் சில பிராந்தியங்களில் வாக்குமோசடி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
மேலும் ஒவ்வொரு புகாரும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என NEC பொதுமக்களுக்கு உறுதியளிக்கின்றது."
என குறிப்பிட்டார்.
இவ்வாறான புகார்களின் அதிகரிப்பு சர்வதேச கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பை அதிகரிக்கவும், தேர்தல் மோசடிகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தவும் துர்ண்டியிருக்கின்றது.
மேலும் தேர்தல் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்காக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விழிப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கவேண்டும் என சிவில்சமூக அமைப்புகள் NEC ஐ வலியுறுத்தியுள்ளன.