வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழ்ப்பாணத்திற்கு ஆறு: ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!!!


tamil news: வடக்கு பிராந்தியத்தின் சுத்தமான நீர்த்தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஆறு ஒன்றினை நிர்மாணிக்கப்போவதாக ரணில் விக்கிரமசிங்க இன்று(02.08.2024) அறிவித்துள்ளார்.


தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் ஆலையைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அதாவது,

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழுள்ள தாளையடி கடல்நீரை உப்புநீக்கும் ஆலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(02.08.2024) திறந்துவைக்கப்பட்டது.


266 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிஜல் நீர்வழங்கல் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி(ADB) மற்றும் இலங்கை அரசாங்கத்தால் கூட்டாக நிதி அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 2025ம் ஆண்டளவில் 186 கிராமசேவையாளர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய்நீரை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


இதன் மூலம் வட பிராந்தியத்திலுள்ள 122,000 குடும்பங்களில் 300,000 க்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள்.


மேலும் இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச சபையின் தாளையடியில் பசுமையான வயல்வெளியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.