வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

'ஐஸ்' பாவித்த மாணவன் வைத்தியசாலையில்...


tamil news: வவுனியா நகரப்பகுதியை அண்மித்த பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்து ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், மாணவனது உடல்நிலை தேறிவருவதாக காவற்துறையினர் இன்று(20.08.2024) தெரிவித்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப்பகுதியை அண்மித்த பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்விகற்கும் ஒரு மாணவன்(வயது 12) பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடையொன்றின் அருகில் ஒதுக்குபுறமான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.


தொடர்ந்து சிறிதுநேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்ததையடுத்து மாணவனின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியநிலையில் அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர்விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.


குறித்த மாணவன் ஜஸ் போதைப்பொருளை பாவித்ததன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.


மேலும் குறித்த மாணவன் மதகுரு ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.