வளர்ப்புநாய் கடித்ததில் பெண் பலி!
tamil news: இன்றையதினம்(26.08.2024) யாழ்ப்பாணத்தில் வளர்ப்புநாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியைச்சேர்ந்த மகேந்திரன் சாந்தி(வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதாவது,
கடந்த மாதம் வளர்ப்புநாய் கடித்து இரத்தம் வடிந்தநிலையில் உரிய சிகிச்சை பெறாமல் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு பின் மூதாட்டிக்கு தோல் வருத்தம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இன்று(26.08 2024) உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து மரணவிசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்