கனகபுரம் துயிலும் இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் - சங்குவடிவில் தீச்சுவாலை!
tamil news: இன்றையதினம்(28.08.2024) தமிழ்ப் பொது வேட்பாளர் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கற்பூரம் ஏற்றி வணக்கம் செலுத்தியபோது போர்ச்சங்கு வடிவில் தீச்சுவாலை விட்டெரிந்தமை அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது,
இன்றையதினம்(28.08.2024) கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேந்நிரன் அவர்களுடைய பிரச்சாரப்பயணம் இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் ஆரம்பித்த மக்கள் சந்திப்பானது,
பூநகரி, நாச்சிக்குடா, முழங்காவில், ஸ்கந்தபுரம், அக்கரையான், கனகபுரம் மற்றும் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வந்தநிலையில் முழங்காவில் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் வணக்கத்தையும் செலுத்தியிருந்தார்.
இந்நிலையில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கற்பூரத்தினை ஏற்றியபோது அந்த சுடரானது போர்ச்சங்கின் வருவில் ஒரு நிமிடம் எரிந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மனம் நெகிழ்ச்சியடைந்த நிலையில் சம்பவம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளமை தற்போது பலராலும் பார்க்கப்பட்டுவருகின்றன.
மேலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியற்துறைப் பொறுப்பாளரான சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களுடைய வித்துடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.