வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு விரல் நீட்டுகின்றநிலை ஏற்படாது! செல்வம் அடைக்கலநாதன்


tamil news:

"தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது.


நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம்மீது சேறுபூச முனைகிறார்கள்.


அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடகிழக்கை பிரித்தவர்கள்.


அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள்"

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் தெரிவித்தார்.


நேற்றையதினம்(28.08.2024) வவுனியாவில் தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரித்து துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 


மேலும் அவர் தெரிவிக்கையில்,

"தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய ஆதரவுதளம் அதிகரித்து வருகின்றது.


எமது மக்கள் எமது இலட்சியபாதையிலே பொது வேட்பாளருக்கு கட்டாயம் வாக்களிப்பார்கள் என கருதுகின்றேன். 


மேலும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக  எதிராக கூறும் கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.


எங்களுடைய கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சியாகும்,

ஆகவே அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.


எமது கட்சியினை பொறுத்தவரை ஒரு முடிவினை எடுத்துள்ளது."

என குறிப்பிட்டார்.


மேலும்

"பொதுக்கட்டமைப்பில் பேச்சுவார்த்தைக்கு செல்வது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட நேரம்வரையே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.


அதன்போது குறிப்பாக தனித்தனியாக செல்வதைவிடுத்து சேர்ந்து செல்வது,

அத்துடன் அவர்களுடைய கடிதத்தில் என்னென்ன வலியுறுத்தப்பட்டுள்ளதோ அதன் பிரகாரம் ஒரு முடிவினை எடுத்து செல்வது என்பது  தொடர்பாகவும் நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம்.


அனுரகுமாராவின் தேர்தல் விஞ்ஞானத்திலே பாதுகாப்புப்படை தொடர்பாகவும் குறிப்பாக மனிதவுரிமை மீறல்களை செய்தவர்களை காப்பாற்றுவது தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இவர்கள்தான் வடகிழக்கை பிரித்தவர்கள்.


என்னைப்பொருத்தவரை எங்கள் மக்கள் அனுரவை பற்றி சிந்திக்கவில்லை என்பதுதான் உண்மை.


அனுர தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது கருத்துக்களை தெரிவித்தாலும் கூட எங்களது அடித்தளத்தை உடைத்து எறிந்தவர்கள் ஜேவிபியினரே.


இணைந்த வடகிழக்கிற்காக எங்களுடைய போராளிகள், இயக்கங்கள் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள்.


அதனை உடைத்த பெருமை ஜேவிபினருக்கு இருக்கின்றது.


அவர்கள் என்னதான் தேனும், பாலும் ஓடுமென்று கூறினாலும் கூட அவர்களுக்கு தமிழர் பகுதிகளில் வாக்குபோடுவது என்பது கடினமாகத்தான் இருக்கும்.


தமிழ் மக்களும் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளும் ஒர் அணியில் திரளவேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருக்கின்றது.


பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருக்கின்றநிலையில் ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ்ச்சமூகம் ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு இருக்கின்றது.


இதனை செய்தியாக்கவேண்டும் என்பது தான் நமது சங்கு சின்னத்தின் நோக்கமாக இருக்கின்றது.


எமது மனங்களிலே நீறுபூத்த நெருப்பாக எமது விடுதலை வேட்கை  இருக்கின்றது. 


இந்நிலையில் நமது சங்கு சின்னத்தின் ஊடாக தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கின்றோம் என்ற செய்தியை சொல்ல வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது.


தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து பின்வாங்காது. 


ஜனாதிபதியை நாங்கள் மூவரும் சந்தித்தது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் சூழல் ஏற்படுமா என்று பலபேர் எம்மீது சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.


தமிழீழ  விடுதலை இயக்கத்தினர் மக்களுடைய சிந்தனையின் அடிப்படையில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என எண்ணுபவர்கள்.


எந்தநிலையிலும் தென் இலங்கை வேட்பாளர்களுக்கு விரல் நீட்டுகின்ற நிலை ஏற்படாது"

என தெரிவித்தார்.