திருகோணமலையை சேர்ந்த குடும்ப தலைவன் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு!!!
tamil news: இன்றையதினம்(03.08.2024) முல்லைத்தீவு செம்மலை பிரதேசத்தில் 14வது மைல்கல் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் திருகோணமலையினை சேர்ந்த நவரத்தினம் றாஜகாந்தன் என்பவர் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருபவர் என்றும் இந்தநிலையில் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவற்துறைக்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்