இயக்கச்சி சந்தியில் விபத்து! ஒருவர் பலி
tamil news: இன்று(23.08.2024) இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து கிளிநொச்சி இயக்கச்சி சந்தியில் நடந்து சென்றவர் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பரந்தன் பகுதியைச்சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அதாவது,
நடந்துசென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டுவிலகி நிற்குமாறு பேசிவிட்டு பேருந்தை எடுக்க முற்பட்டபோது குறித்த நபர் தடக்கி வீழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த விபத்து தொடர்பாக பளை காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்