உயிராபத்திற்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைக்காக களம் கண்டவர் அரியநேந்திரன் ஐயா! முன்னாள் நகரசபை முதல்வர்
tamil news:
"2004ம் ஆண்டு எங்களுடைய தமிழ் மக்களுடைய போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா உடைய அட்டகாசம் நிறைந்திருந்த காலப்பகுதி அது.
உயிராபத்திற்கு மத்தியிலே வீதிதெருக்களில் பிரச்சாரம் செய்யமுடியாத காலகட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக முதன்முதலில் பாராளுமன்ற தேர்தலில் அரியநேந்திரன் ஐயா போட்டியிட்டவர்."
இவ்வாறு கூறினார் யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன்.
நேற்றையதினம்(30.08.2024) முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள மாவடி பி;ள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்ற தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சாரக்கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதாவது இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 இல் நடைபெறவுள்ளநிலையில் ஈழத்தமிழர்கள் தரப்பில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேந்திரன் அவர்கள் களமிறங்கியுள்ளார்.
கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த பிரச்சாரப்பயணம், கிளிநொச்சி மாவட்ட மக்களின் அமோக ஆதரவினைத் தொடர்ந்து தற்சமயம் முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் மாங்குளம் மாவடி பி;ள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கருத்துத்தெரிவிக்கும்போது,
"நாங்கள் அரியநேந்திரன் ஐயாவை இறக்கியிருக்கின்றோம்.
இந்த இடத்தில் அரியநேந்திரன் ஐயா அவர்களை பற்றி சொல்லவேண்டும்.
2004ம் ஆண்டு எங்களுடைய தமிழ் மக்களுடைய போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கருணா உடைய அட்டகாசம் நிறைந்திருந்த காலப்பகுதி அது.
உயிராபத்திற்கு மத்தியிலே வீதிதெருக்களில் பிரச்சாரம் செய்யமுடியாத காலகட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக முதன்முதலில் பாராளுமன்ற தேர்தலில் அரியநேந்திரன் ஐயா போட்டியிட்டவர்.
மட்டக்களப்பு மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவரே தமிழ்ப் பொது வேட்பாளராக இறங்கியுள்ளார்."
என தெரிவித்தார்.
மேலும் தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மை அங்கத்தவர்கள் பலர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.