பச்சிளம் குழந்தையின் இறப்பில் மர்மம்!!!
tamil news: யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் பிறந்து 45 நாளான குழந்தையொன்றின் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது,
நேற்றையதினம்(03.08.2024) குழந்தையின் தாய் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியநிலையில் சில மணிநேரங்களில் குழந்தை மயக்கமுற்றுள்ளது.
இதனையடுத்து குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுபோனநிலையில், மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டநிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணையை மேற்கொண்டார்.
இதன்போது குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தழும்புகள் காணப்படுவதன் காரணமாக இன்று(04.08.2024) நடைபெறும் உடற்கூற்றுப்பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் உடற்கூற்றுப்பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.