யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்பத்தலைவன் பலி!
tamil news: இன்றையதினம்(24.08.2024) யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியிலிருந்து குடும்ப தலைவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம், சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம், சூளானை பகுதியிலுள்ள ஆலயமொன்றில் திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் குறித்தநபர் பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்
"தனது வீட்டின் மோட்டார் இயங்கவில்லை"
எனக்கூறி பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்ட குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்த குறித்தநபர் டெஸ்டர் எடுத்துவருமாறு வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
அவர் டெஸ்டரை எடுத்துவந்து பார்த்தவேளை குறித்தநபர் கீழேவிழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரணவிசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளநிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.