தமிழ்ப் பொது வேட்பாளர் தியாகதீபத்திற்கு அஞ்சலி!!!
tamil news: ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொலிகண்டியிலிருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் முக்கியகட்டமாக இன்று(27.08.2024) அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியிலுள்ள திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருத்தார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலிசெலுத்தி பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்