இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் ஷல்கி கொழும்பு வந்தடைந்தது!
tamil news: இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்(INS) ஷல்கி இன்று(02.08.2024) முறையான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டார்.
கடற்படையின் கூற்றுப்படி, இந்த ஐஎன்எஸ் ஷல்கி 64.4 மீ நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பல் தளபதி ராகுல் பட்நாயக் தலைமையில் 40 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
ஐNளு ஷல்கியின் கட்டளை அதிகாரி வந்திறங்கியதும், மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்தார்.
இந்நிலையில் நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும்போது இலங்கை கடற்படையின் பணியாளர்கள் நீர்மூழ்கிக்கப்பலுக்குச் சென்று அதன் செயற்பாட்டு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, ஐஎன்எஸ் ஷல்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(04.08.2024) அங்கிருந்து புறப்படும்.
மேலும், நீர்மூழ்கிக்கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்களை ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.