வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

நடுக்கடலில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு!


tamil news: கடந்த 26ம் திகதி டெல்வின்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றிருந்த டெல்வின் ராஜ், வெள்ளைச்சாமி, சுரேஷ் மற்றும் எமரிட் ஆகிய 4 மீனவர்கள் விபத்துக்குள்ளான நிலையில் இறந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


அதாவது மீன்பிடிக்கச் சென்று மறுநாள்(27.08.2024) மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பியபோது ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளாகியது.



தொடர்ந்து மூழ்கிய படகிலிருந்து டெல்வின் ராஜ், சுரேஷ்  ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்பட மீட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.


ஆனால் மாயமான மீனவர்களான எமரிட் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரை இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக மீனவர்கள் 2 நாட்களாக தேடிவந்த நிலையில் இன்று(28.08.2024) மாலை நடுக்கடலில் உயிரிழந்த நிலையில் எமரிட் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


உடலை கைப்பற்றி உடற்கூற்று பரிசோதனைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

விபத்து தொடர்பாக கடலோரக்காவற்படை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் நடுக்கடலில் மாயமான வெள்ளைச்சாமி என்ற மீனவரை அரசு தேடித்தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள் இறந்த மீனவர் எமரிட் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.