தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பில் தீர்மானம்!
tamil news: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளராக போட்டியிட பரிந்துரை செய்யப்பட்ட 2 வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரை தெரிவுசெய்வதில் நேற்று(05.08.2024) நீண்ட விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழமை(07.08.2024) அல்லது வியாழக்கிழமை(08.08.2024) பொதுவேட்பாளர் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(05.08.2024) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
நேற்றையதினம்(05.08.2024) யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு தமிழ் பொது வேட்பாளரை இறுதி செய்யும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தது.
தமிழ்ப்பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்வதற்காக பல மணிநேரமாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆலோசனை நடத்தியபோதும், இறுதிப் பொதுவேட்பாளரை தீர்மானிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.