உங்களைத் தான் எதிர்பார்த்திருந்தோம் - தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த மக்கள்!
tamil news: இன்றையதினம்(24.08.2024) மாவிட்டபுரம் தொடக்கம் மருதனார்மடம் வரையில் மக்களை சந்தித்திருந்த தமிழ்ப் பொது வேட்பாளர் தரப்பினரிடம்
"நீங்க நிக்கிறதா சொன்னதில இருந்து உங்களைதான் எதிர்பாத்துக்கொண்டிருந்தோம்"
என தெரிவித்த மக்கள் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தினர்.
அதாவது,
வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள சிவில் சமூக அமைப்புக்களும், தமிழ்த்தேசிய அரசியற்கட்சிகளும் இணைந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் அவர்களை தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறக்கியுள்ளனர்.
இதனையடுத்து ஒருசில அரசியல்வாதிகள் எதிர்த்தாலும் தமிழ்த்தேசியம் சார்ந்த சிவில் சமூகத்தினரும், அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதின் பின்னணி, நோக்கம், எதிர்பார்ப்பு குறித்து மக்களிற்கு தெளிவினை உருவாக்கும் நோக்கில் பொதுவேட்பாளர் தரப்பு மக்களை சந்தித்து விளக்கம் அளித்துவருகின்றனர்.
நேற்றையதினம்(23.08.2024) ஆரம்பித்த மக்கள் சந்திப்பு, இன்றையதினம்(24.08.2024) மாவிட்டபுரம் பகுதியில் ஆரம்பித்து மருதனார்மடம் பகுதி வரை இடம்பெற்றன.
இதன்போது மக்கள், வாகனங்களை நிறுத்தி துண்டுபிரசுரங்களை வாங்கிச்செல்வதும், தங்களுடைய சந்தேகங்களை கேட்டுக்கொள்வதுமாக தங்களுடைய ஆர்வத்தினை வெளிப்படுத்தினர்.
மேலும் குறித்த சந்திப்புகளில் தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து எழுப்பப்படும் மக்களின் சந்தேகங்கள் குறித்தும், போலித்தகவல்கள் குறித்த துண்டுபிரச்சுரங்களை பிரசுரிப்பது குறிப்பிடத்தக்கது.