ரஷ்யாவில் உக்ரைன் குண்டுவீச்சு!
tamil news: ரஷ்யா - உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவருகின்ற நிலையில் 2 தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் இன்றுவரை(31.08.2024) பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றன.
குறிப்பாக ரஷ்யா மீதான தாக்குதலை அண்மைகாலமாக உக்ரைன் தீவிரப்படுத்திவருகின்றது.
அந்தவகையில் கடந்தசில தினங்களுக்கு முன்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மீது இதுவரை இல்லாதளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
இந்நிலையில் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 40Km தொலைவில் அமைந்துள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியுள்ளது.
பெல்கோரோட் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரியளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உக்ரைனின் குண்டுவீச்சில் ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் 6 சிறுவர்கள் உட்பட 37 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது."
என தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான ரஷ்யாவின் பதிலடி எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.