வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தமிழ்ப் பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்குகின்றார்!


tamil news: எதிர்வரும் செம்டெம்பர் 21 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அவர்கள் போட்டியிடவுள்ளார் என இன்றையதினம்(08.08.2024) உத்தியோகபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் ந.ஶ்ரீகாந்தா அவர்களினால் வெளியிடப்பட்டது.


ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்த்தேசிய பசுமை இயக்கம், தமிழ்த்தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றிற்குமிடையில் எட்டப்பட்டது.



மேலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.