நல்லூர் ஆலயச்சுற்று வீதிகளின் போக்குவரத்துக்கு தடை!
tamil news: நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று(08.08.2024) காலை முதல் நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்படவுள்ளது.
குறித்த வீதித்தடை செப்டம்பர் மாதம் 4ம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாகவரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாகவுள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும்.
இவ்வாறு வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக துறைசார் அதிகாரிகளால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ் மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிக் காவற்துறை மாஅதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட காவற்துறை அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டனர்.
மேலும், நல்லூர் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின்போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்கமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.