தமிழ் பொது வேட்பாளர்: தமிழரசுக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவு!!!
tamil news: இன்றையதினம்(28.08.2024) கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியை சேர்ந்த கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர்கள் 4 பேர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தங்களுடைய ஆதரவினை வழங்கியுள்ளனர்.
அதாவது இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 இல் நடைபெறவுள்ளநிலையில் ஈழத்தமிழர்கள் தரப்பில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேந்திரன் அவர்கள் களமிறங்கியுள்ளார்.
இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான MA. சுமந்திரன் அவர்கள்
"இது அனாவசியமானது, மக்களை திசை திருப்பும் முயற்சி"
எனவும்,
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன்
"தமிழ்ப் பொது வேட்பாளரை யாருக்கு தெரியும்?"
"அரியநேந்திரன் மரியாதை கெடப்போறார்"
என தெரிவித்திருந்தனர்.
ஆனால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அமோக வரவேற்பினை வழங்கியதுடன்,
மக்கள் தாமாகவே முன்வந்து ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து, கட்சிகளை கடந்த ஆதரவு நிலையினை அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.