சீன கடற்படை பயிற்சிக் கப்பல் 'போ லாங்' இலங்கைக்கு வருகை!
tamil news: சீனாவின் கடற்படை பயிற்சிக் கப்பலான PLANS Po Lang, அதன் பணியாளர்களின் கடல்வழி பயிற்சியின் ஒருபகுதியாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
ஆகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் 2024 இறுதி வரையில் நீடிக்கவுள்ள இந்த விஜயமானது தொழில்முறை கடற்படைத் திறன்களை மேம்படுத்துவதற்கும், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுடன் வலுவான கடல்சார் உறவுகளை வளர்ப்பதற்குமான சீனாவின் ஒரு மூலோபாய முயற்சியாகும்.
அதாவது,
வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலுள்ள பல நாடுகளில் நிறுத்தங்களை உள்ளடக்கிய விரிவான பயிற்சியின் ஒரு பகுதியாக PLANS Po Lang இன் இலங்கை விஜயம் உள்ளது.
சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் ஜாங் சியாவோங்கின் அறிக்கையின்படி,
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையில்(பிஎல்ஏ கடற்படை) மிட்ஷிப்மேன்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதே இந்த பணியின் முதன்மை நோக்கமாகும்.
"maritime community with a shared future" இனை நோக்கமாக கொண்டு சீனாவின் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த முயற்சிகளின் பகுதியாகவும் இந்த விஜயம் உள்ளது.
பயிற்சிப் பணியானது, பங்கேற்கும் கடற்படை அதிகாரிகளின் செயல்பாட்டுத் திறன்களை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல் சீனாவிற்கும், அதற்கு ஒத்துழைக்கும் நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் கூட்டுறவு உறவுகளை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் PLANS Po Lang சீன PLA கடற்படை மற்றும் இலங்கை உட்பட அது செல்லும் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், பரிமாற்றங்களுக்கான ஒரு தளமாக செயல்படும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு முக்கியத்துவம் பெற்றுவரும் நேரத்தில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக சீனக் கடற்படைத் தூதுக்குழுவினர் தங்கள் இலங்கை சகாக்களுடன் பல்வேறு தொழில்முறை பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள், கூட்டுப்பயிற்சிகளில் பங்கேற்பார்கள், மேலதிக ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்துவரும் கடல்சார் உறவை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், இது பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த விஜயத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன், சீனாவுடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், சீன கடற்படையினரால் பகிர்ந்துகொள்ளப்படும் தொழில் நிபுணத்துவத்தின் மூலம் பயனடைவதற்கும் இது ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் இருப்பிடத்தின் மூலோபாய முக்கியத்துவம் குறித்தும் பிராந்திய கடல்சார் இயக்கவியலில் இலங்கையை முக்கியப் பங்காற்றுவது குறித்தும் இந்த விஜயம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் PLANS Po Lang இன் இந்த வருகை ஒரு வழக்கமான கடற்படை பணி மட்டுமல்ல; இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகிவரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பின் அடையாளமாகவும், அங்கு கடற்படை சக்தி மற்றும் இராஜதந்திரம் சர்வதேச உறவுகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.