கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய 2 காவற்துறை பணியாளர்கள் இடைநிறுத்தம்!
tamil news: கிளிநொச்சி காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவரின் சேவையை இடைநிறுத்த கிளிநொச்சி காவற்துறை அத்தியாட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார்சைக்கிளின் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தநிலையில், ஓட்டுனருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்காமலிருக்க மோட்டார்சைக்கிள் ஓட்டுநரிடம் 5,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் கிளிநொச்சி காவற்துறை முறைப்பாடு செய்ததையடுத்து, உதவிக்காவற்துறை அத்தியாட்சகர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டநிலையில் 2 காவற்துறை உத்தியோகத்தர்களை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்