தமிழர்களின் போராட்டத்தை பிளவுபடுத்தியதற்கான தண்டனையை தான் 2005 இல் ரணில் பெற்றார்! பா. அரியநேந்திரன்
tamil news: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை பிளவுபடுத்தியதற்காக விடுதலைப்புலிகளினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச்செய்தது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ்த்தேசியப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று(17.09.2024) மாலை மட்டக்களப்பு கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்றது.
மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்