தமிழ்ப்பொது வேட்பாளரை வரவேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
tamil news: நேற்றுமுன்தினம்(30.08.2024) முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மத்திய செயற்குழு உறுப்பினருமான கெளரவ திருமதி சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா அவர்கள் ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளரை மல்லாவியில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு வரவேற்றார்.
இதன்போது ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் தனது முழுமையான ஆதரவினை தெரிவித்ததுடன்,
ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை முழுமையாக ஆதரிக்கும் வகையில் சங்கு சின்னத்திற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது இல்லத்தில் வருகைதந்த ஆதரவாளர்களிடம் கூறினார்.
மேலும், தமிழரசுக்கட்சியின் அனேக உறுப்பினர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்