தமிழ்ப் பொது வேட்பாளர் வரக்கூடாதென்றால், தென்னிவங்கை வேட்பாளர்களும் வரக்கூடாது! பா. அரியநேந்திரன்
tamil news:
"தமிழ்ப்பொது வேட்பாளர் வடகிழக்கினை தாண்டி வரக்கூடாது என்றால் தென்னிலங்கை சிங்கள வேட்பாளர்களும் வடகிழக்கிற்கு வரக்கூடாது."
இவ்வாறு தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேந்திரன் அவர்கள் நேற்று(31.08.2024) மல்லாவியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
நேற்று முன்தினம்(30.08.2024) தென்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மனோகணேசன் அவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் வடகிழக்கினை தாண்டி வரக்கூடாது என்னும் பொருள்பட கூறியிருந்ததாகவும்,
அவ்வாறு வரக்கூடாது என்றால் தென்பகுதி சிங்கள வேட்பாளர்களும் வடகிழக்கிற்கு வரக்கூடாது,
அவர்கள் எங்கும் பிரச்சாரம் செய்யமுடியும் என்றால் எனனாலும் செய்யமுடியும் என தெரிவித்தார்.
மேலும்,
தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது இராஜதந்திர முன்னகர்வு எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்