யாழில் கொடூர விபத்து - இளைஞனின் பாதம் துண்டானது!!!
tamil news: இன்று(10.09.2024) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியின் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவரின் பாதம் மோட்டார் சைக்கிளின் செயினிற்குள் அகப்பட்டு துண்டாகியுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்தவர்கள் விபத்தில் காயமடைந்த சாரதியை மீட்டு நோயாளர்காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் துண்டாடப்பட்ட பாதத்தையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பில் சுன்னாகம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்