எரிபொருள் நிரப்புநிலைய ஊழியர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!
tamil news: நேற்றையதினம்(01.09.2024) வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கத்திற்கு எதிரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்புநிலையத்தில் இரவு 12:15 மணியளவில் எரிபொருள் நிரப்ப வந்த மூவர் குறித்த நிலையில் கடமையிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு(01.09.2024) ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய குழு குறித்த எரிபொருள் நிரப்பும்நிலையத்தின் ஊழியரோடு தர்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர்களில் ஒருவன் அங்கு கடமையில் இருந்த வேறொரு எரிபொருள் நிரப்புநிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது போக்குவரத்து காவற்துறையினர் இருவரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளநிலையில், தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்புநிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு முச்சக்கரவண்டியில் காற்துறையினர் வந்தபோது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருள் நிரப்புநிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.