வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து போலித்துண்டுப் பிரசுரம்! ஆரம்பமானது விசமிகளின் வேலை


tamil news: நேற்றையதினம்(20.09.2024) தமிழ்ப் பொது வேட்பாளர் கூறியதாக குறிப்பிட்டு போலியான துண்டுப்பிரசுரங்களை தென்னிலங்கை கட்சிகளின் விஷமிகள் விநியோகித்துள்ளனர்.


அதாவது,

தமிழ் பொதுவேட்பாளரான பா. அரியநேந்திரன் அவர்கள் சஜீத் பிரமதாசாவை ஆதரிப்பதாகவும், அவருக்கு வாக்குச்செலுத்துமாறும் கூறியதாக குறிப்பிட்டு தென்னிலங்கை அரசியற்கட்சிகளின்  விசமிகளால் போலியான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 


இதனையடுத்து பா. அரியநேந்திரன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது,

"இது முற்றிலும் போலியான துண்டுப்பிரசுரம்.


அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தென்னிலங்கை பேரினவாத கட்சிகளின் அடிவருடிகளால் இயற்றப்பட்டவை"

என தெரிவித்திருந்தார்.



மேலும் அவர் தெரிவிக்கையில்,

"இப்படி நடக்கும் என்பதை நான் ஏற்கனவே பிரச்சார மேடைகளில் கூறியிருந்தேன்.


இது என்னால் வெளியிடவில்லை என்பதை தெரிவிக்கின்றேன்.


இவ்வாறான கீழ்த்தரமான செயல்களின் பின்னணியை மக்கள் உணரவேண்டும்."

என குறிப்பிட்டு இருந்தார்.



மேலும் பா.அரியநேத்திரன் அவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இராஜேந்திரன் ஆதீஷன், 2020 முதல் சுயாதீன ஊடகவியலாளராக பணிபுரிகின்றார்.

தேசிய அரசியல், பூகோள அரசியல் மற்றும் மனிதவுரிமைகள், காலநிலை சார்ந்த ஊடகவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கல்வித்தகைமையாக Diploma in Psychology, Diploma in Organizational behaver ஆகியவற்றை கொண்டுள்ளார்.