யாழ். இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!!!
tamil news: சுன்னாகம் காவற்துறைப்பிரிவுக்குட்பட்ட தாவடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி இரவு இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது,
தாவடி தெற்கு பிரதேசத்திலுள்ள பத்திரகாளி கோவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணியளவில் உள்நுழைந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாதோர் குழு, இளைஞன்(வயது 22) மீது வாள்வெட்டினை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இளைஞனின் கையில் வாள்வெட்டுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதற்குமுன் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும், தாயார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியாதநிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்பு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.