யாழில் மூத்த சட்டத்தரணி சடலமாக மீட்பு!
tamil news: யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த மூத்த சட்டத்தரணி நேற்றையதினம்(09.09.2024) அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த கனகசபாபதி நமநாதன்(வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரழந்தவரின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம்(09.09.2024) இவருக்கு உணவு கொண்டுவந்தவர் வீட்டில் இவரது நடமாட்டத்தை காணாதநிலையில் அயல்வீட்டுக்காரர்களுக்கு அறிவித்து வீட்டினுள் சென்றுபார்த்தபோது அவர் நிலத்தில் விழுந்து உயிரிழந்தநிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து கோப்பாய் காற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலத்தைமீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.