வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சென்னையிலிருந்து பலாலியிற்கான விமானசேவை ஆரம்பம்!


tamil news: தமிழ்நாட்டின் சென்னைக்கும், யாழ்ப்பாணம் பலாலிக்குமிடையேயான இண்டிகோ(Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமானசேவை நேற்று(02.09.2024) முதல் ஆரம்பமாகியுள்ளது.


நேற்று தொடக்கம் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு விமானசேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ(Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தற்போது யாழ்ப்பாணம் பலாலிக்கு தினசரி விமானசேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம்(Alliance Air) நடத்துகின்றது.


இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சர்வதேசதரத்துக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று(02.09.2024) பிற்பகல் 3.07 மணியளவில் பலாலியை வந்தடைந்தது.


தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், நினைவுப் பரிசில்கள் வழங்கல், கேக் வெட்டுதல் மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்றன.


பின்னர் பலாலியிலிருந்து சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.


பலாலியிலிருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.


பலாலியிலிருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ளக்கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.


ஆரம்பநிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில்அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.