கிளிநொச்சியில் கோர விபத்து! ஒருவர் பலி
tamil news: இன்று(05.09.2024) இரவு 8.00 மணியளவில் கிளிநொச்சி காவற்துறைப்பிரிவிற்குப்பட்ட பரந்தன் A9 வீதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன்ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறை மேற்கொண்டு வருகின்றது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்