மாதகல் கடலில் காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு!
tamil news: யாழ்ப்பாணம், மாதகல் கடலில் காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று(05.09.2024) காலை கரையொதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று(04.09.2024) அதிகாலை வேளையில் மாதகலிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கியுள்ளது.
அதனையடுத்து ஒருவர் பாதுகாப்பாக கரைசேர்ந்ததுடன் மற்றையவர் காணாமற்போயுள்ளார்.
இவ்வாறு காணாமற்போனவரான மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன்(வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக இன்று(05.09.2024) காலை கரையொதுங்கியுள்ளார்
Labels:
உள்நாட்டுச் செய்திகள்