சஜித் தான் வெற்றிபெறப் போறாராம்! ஆதரிக்க காரணம் கூறிய சுமந்திரன்
tamil news: இலங்கை தமிழரசு கட்சி இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 இல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும்,
அதற்கு காரணம் தனக்கு சஜித் தான் வெற்றிபெறப்போவதாக தெரிவதாக காரணமும் கூறியுள்ளார் தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் M.A சுமந்திரன்.
இன்றையதினம்(01.09.2024) தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றதாகவும், இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் நரன் மீடியாவிற்கு கிடைத்த இரகசியத்தகவலின்படி தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவி ரஞ்சினி கனகராசா, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர்,
கிழக்கு மாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரிப்பதால் அவரையே நாமும் ஆதரித்தால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சலுகைகள், வாய்ப்புக்கள் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் கூறுகையில்,
"ரணில் வெல்லமாட்டார்; சஜித் தான் வெல்வார் எனவும் வெல்பவருக்கு தான் எங்களுடைய வாக்கு இடப்படவேண்டும்."
என தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது கருத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் மீதான குரோதமே அதிகமாக காணப்பட்டதாக அங்கிருந்துவந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து பிறிதொரு உறுப்பினர்,
"தமிழ்ப் பொது வேட்பாரை ஆதரிக்கவேண்டாம். ஆனால் யாரை ஆதரிப்பது என்பதை அவரவர் சுயவிருப்பத்திற்கேற்ப முடிவெடுக்க அனுமதிக்கவேண்டும்"
என கேட்டபோது,
"இல்லை இல்லை... அவ்வாறு விடமுடியாது."
என சுமத்திரன் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் மேலும் கருத்துத்தெரிவித்தபோது, தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் M.A சுமந்திரன் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.
வடகிழக்கு பிராந்திய தமிழ் மக்களுடைய ஆதரவு தமிழ்ப் பொது வேட்பாளரான பா. அரியநேந்திரன் அவர்களுக்கு அதிகரித்துவரும் நிலையில் இந்த சம்பவம் தமிழரசுக்கட்சி மீதான மக்களின் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.