"என்னைக் கருணைக்கொலை செய்யுங்கள்" ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த முதியவர்!!!
tamil news: யாழ்ப்பாணம், மானிப்பாயில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் தன்னைக் கருணைக்கொலை செய்யுமாறு வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிய சம்பவம் நேற்று(05.09.2024) இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளையதம்பி ஜெயக்குமார் எனும் முதியவர் ஒரு காலை இழந்து, நோய்வாய்ப்பட்டு ஆதரவற்றநிலையில் மானிப்பாய் உதயதாரகை சனசமூக நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சிகள் எடுத்தநிலையில்,
முதியோர் இல்லங்கள் அவரை ஏற்கமறுத்த நிலையில் கிராமசேவையாளரின் சிபாரிசு கடிதத்துடனும் முயற்சிகளை மேற்கொண்டநிலையிலும் எந்த முதியோர் இல்லமும் அவரை சேர்க்கவில்லை.
தொடர்ந்து பிரதேசசெயலரின் சிபாரிசு கடிதத்துடன் பளையிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக தமது செலவில் அவரை ஊரவர்கள் அழைத்துச்சென்றபோதிலும், அவரை சேர்த்துக்கொள்ள நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்நிலையில் எந்தவொரு முதியோர் இல்லங்களோ, அமைப்புக்களோ, நிறுவனங்களோ தன்னை பொறுப்பேற்காததால் தன்னை கருணைக்கொலை செய்துவிடுமாறு வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.